முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா? தலக்காடு கோவில்கள் காவிரி நதிக்கரையில் மணல் மூடி புதைந்து கிடந்தவற்றை மீட்டெடுத்தனர் என்று அப்படியான கோவில்களில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்களில் ஒன்றான பாதாளே/ளீஸ்வரர் கோயிலைச் சென்றடைந்தோம் என்று சொல்லியிருந்தேன். இப்ப அந்தக் கோவிலைப் பற்றி.....
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
வெள்ளி, 19 டிசம்பர், 2025
புதன், 17 டிசம்பர், 2025
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2025 பரிசு பெற்ற கதைகளைப் பற்றி...பகுதி - 1 - 1/7
குவிகம் பதிப்பகம் -புத்தகத்தின் விலை ரூ 350. புத்தகம் வாங்க விரும்புவோர் 'குவிகம்' கிருபானந்தன் அவர்களை 9791069435 இல் தொடர்பு கொள்ளவும்.
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2025ல் பரிசு பெற்ற கதைகளை, "அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2025 பரிசுக் கதைகள்" என்று முழுத்தொகுப்பாக நம் இராய செல்லப்பா சார் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பரிசு பெற்றவர்களுக்கு மூன்று பிரதிகள் வழங்கப்பட்டதையும் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.
சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன். இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று
கவனத்தோடு கதைத்திருக்கிறேன்.
புதன், 10 டிசம்பர், 2025
தலக்காடு - 2 - பாடலேஸ்வரா / பாதாளீஸ்வரர் / வாசுகீஸ்வரர் கோவில் நோக்கி
தலக்காடு - 1 ன் தொடர்ச்சி.
மைசூர் உடையார் வம்சத்தின் ராணியான அலமேலு, சில வரலாற்றுச் சம்பவங்களால் - அப்படியான ஒரு சம்பவத்தில் தன் கணவரை இழந்ததால், சோழர்களுக்கும், உடையார்களின் வம்சத்திற்கும் சாபம் இட்டதாகக் கூறப்படுகிறது.
ஞாயிறு, 7 டிசம்பர், 2025
அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2025
எழுத்தாளர் இராய செல்லப்பா சார் குடும்பத்தினர் நடத்தும் அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி- 2025 இந்த வருடமும் மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. தன் அன்னையின் நினைவில் தொடங்கி, எழுத்தாளர்களின் படைப்பாற்றலைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் எளிய முயற்சியாக சென்ற வருடத்திலிருந்து நடத்திவருகிறார், திரு செல்லப்பா சார்.
திங்கள், 24 நவம்பர், 2025
தலக்காடு - 1 - காவிரி பீச்
கடைசியாகப் பார்த்த தலக்காடைப் பற்றித்தான் இப்பதிவு. பின்னர் முடிந்தால், என் மனம் ஒத்துழைத்தால் இடையில் விட்ட பகுதியைப் பற்றி எழுதுகிறேன்.
திங்கள், 17 நவம்பர், 2025
நினைவுப் பூக்கள் - ஜி எம் பி ஸார் - எஸ்தர் அம்மா
இறைவனடி
சேர்ந்த இருவரது ஆத்மாக்களின் மோக்ஷத்திற்கும், நித்ய சாந்திக்கும் பிரார்த்திப்பதுடன்
தீரா துக்கத்திலாழ்ந்த இருவரது குடும்பத்தினருக்கும்
இப்பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் நல்கவும் பிரார்த்தனை
செய்வோம். வேண்டிக் கொள்வோம்.
இருவருடனான எங்கள் தொடர்பு பசுமை மாறாத நினைவுகள் நிறைந்தது. முன்பு பகிர்ந்த அந்த இனிய நாட்களை மீண்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது மனதின் வருத்தம் கொஞ்சம் குறையும்தான்.
திங்கள், 27 அக்டோபர், 2025
லுஷிங்டன் பாலம் - Lushington Bridge - காவேரி கட்டே - Kaveri Katte
மத்தியரங்கம், சிவனசமுத்திரம் தலக்காடு என்று தொடங்கியிருந்தேன். இப்போது கடைசியில் பார்த்த தலக்காடு பற்றி எழுதி முடித்திடலாம் என்று எழுதத் தொடங்கிய போது, ஒரே ஒரு இடம் மிகவும் அழகான இடம் பற்றி மட்டும் உங்களுக்குக் காட்டிவிட்டு தலக்காடு போய்விடலாம். சரியா?
சனி, 18 அக்டோபர், 2025
மத்யரங்கம் - சிவனசமுத்திரம் - தலக்காடு - பகுதி 1
ஸ்ரீரங்கம், ஆதிரங்கம் போயாச்சு மத்யரங்கம் போக வேண்டாமா பல வருஷமாச்சு என்று வீட்டில் சொல்லப்பட்டதும், மத்யரங்கத்தின் அருகில்தானே சிவனசமுத்திரமும் தலக்காடும். இந்த இரு இடங்களும் என் லிஸ்டில் பல வருடங்களாக, சொல்லப் போனால், 2001-2002ல் பெங்களூரில் இருந்தபோது போய், அப்போதைய வசதிகள் சரியாக இல்லாததால் - காரணம் நாங்கள் பொதுப்போக்குவரத்தை உபயோகிப்பதால் - சரியாகப் பார்க்க முடியாமல் விட்ட இடங்களாச்சே என்று நம்மவரிடம் சொல்லி அப்ரூவல் கிடைக்குமான்னு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
திங்கள், 8 செப்டம்பர், 2025
இரண்டு 'ஜி' க்களின் அலப்பறைகள்
4ஜி - இந்தா உன்னைத்தான், அந்த
தங்கச்சி உன்னை அழுத்தி அழுத்தி கூப்பிடுது பாரு.
5ஜி - என்னது? என்னையா? நல்லாருக்கே! ம்ஹூக்கும். காலைலருந்து....6 மணி இருக்குமா...ஹான் அப்ப தொடங்கி இவ்வளவு நேரம் 6 நிமிஷ வீடியோ 7 மணி நேரம் ஆச்சு. தங்கச்சி ஏத்திவிட்ட அவங்க வீட்டாளு வீடியோவை சொமக்க முடியாம சொமந்து மூச்சு திணறி சுத்தி சுத்தி, முக்கி முக்கி அந்த யுட்யூப் பொட்டில போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கறேன். நீ இவ்வளவு நேரம் சும்மாதானே இருந்த போயேன்.
வியாழன், 7 ஆகஸ்ட், 2025
கீதையும் கீதாவும்
//பொதுவாக நான் எனது என்று தன்னை கர்த்தாவாக எண்ணிக் கொண்டு செயல்களை செய்யாத பொழுது அவனை கர்மவினைகள் பாதிப்பதில்லை என்கிறார்கள் செய்பவன் நான் என்னால் தான் இது நடக்கிறது என்னும் புத்தியை விட்டுவிட்டு கர்மங்களில் பற்றற்று அவற்றின் பலனையும் எதிர்பாராமல் செயலாற்றுபவனை கர்மா பாதிப்பதில்லை என்பது ரமணர் அறிவுரையின் சாரம்.//
